ADDED : ஜூலை 27, 2025 11:11 PM

கோவை; அவிநாசி ரோட்டில் உள்ள, ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
'த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ்' எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் பிலிப் பவுலர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ஸ்டேன்ஸ் பள்ளியில் 1953ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கிரிஷ், அவரது மனைவி ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
கிரிஷ் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் கல்வியால் பெற்ற திறமையை, நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்,'' என்றார். கல்வி மற்றும் கலை, விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் கருவூலர் ஜேம்ஸ் ஞானதாஸ், ஸ்டேன்ஸ் பள்ளிகளின் முதல்வர்கள் ஐலின் ஜெத்ரோ, செலின் வினோதினி, ஜான் ஸ்டீபன், ஜேனட், ஜார்ஜினா எவிட்டா சிமன்ஸ், முதன்மை நிர்வாக அதிகாரி ஜான், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
