தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 108 மரங்களுடன் நட்சத்திர வனம்

 108 மரங்களுடன் நட்சத்திர வனம்

 108 மரங்களுடன் நட்சத்திர வனம்


ADDED : மார் 03, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், 108 மரங்களுடன் உருவாக்கப்பட்ட நட்சத்திர வனம் திறப்பு விழா நடத்தப்பட்டது.

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர வனம், 9 கோள்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்களின் பயன்பாடு, இந்திய மக்களின் வானியல் அறிவுக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

வித்யாலயா வளாகத்துக்குள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், 4 ஏக்கர் பரப்பில், இந்த நட்சத்திர வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் உரிய, 108 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வனத்தின் நடுநாயமாக நடராஜரின் வெண்கலத்தலான, 12 அடி உயர திருமேனி அமைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வனத்தை நேற்று காலை 10:00 மணிக்கு உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us