/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டார்ட்அப் மாநாட்டால் வாய்ப்பு! கோவைக்கு தொழில்துறையினர் வெகு உற்சாகம்
/
ஸ்டார்ட்அப் மாநாட்டால் வாய்ப்பு! கோவைக்கு தொழில்துறையினர் வெகு உற்சாகம்
ஸ்டார்ட்அப் மாநாட்டால் வாய்ப்பு! கோவைக்கு தொழில்துறையினர் வெகு உற்சாகம்
ஸ்டார்ட்அப் மாநாட்டால் வாய்ப்பு! கோவைக்கு தொழில்துறையினர் வெகு உற்சாகம்
ADDED : அக் 12, 2025 11:48 PM

கோவை:உலகப் புத்தொழில் மாநாட்டால், இன்ஜி., மாணவர்கள் நிறைந்த கோவைப் பகுதிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வரும் சில மாதங்களில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என தொழில் அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கோவை, கொடிசியா வளாகத்தில் கடந்த, 9, 10ம் தேதிகளில், உலகப் புத்தொழில் மாநாடு நடந்தது. மத்திய மாநில அரசுகளின் 27 துறைகள், சர்வதேச தொழில்வளர் மையங்கள், 500க்கு மேற்பட்டவர்கள், தங்கள் ஐடியாக்களை முதலீட்டாளர்களிடம் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, சர்வதேச நிறுவனங்கள், உரையாளர்கள், ரூ.127 கோடிக்கு முதலீட்டு உத்தரவாதம் என இரண்டு நாட்களும் மாநாடு களைகட்டியது. 72,278 பார்வையாளர்கள் வந்ததாக, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவையின் தொழில் வளர்ச்சி வேகத்தை, இந்த மாநாடு பல மடங்கு அதிகரிக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
உலகப் புத்தொழில் மாநாட்டின் வாயிலாக, கோவை நகரம் உலக அளவில் 'பிராண்ட்' செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே புத்தொழிலுக்கான, தொழிற்சூழல் சிறப்பாக இருக்கிறது. இந்த மாநாடு இச்சூழலை மேலும் வலுவாக்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில்தான் அதிக ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்படுகின்றன; வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.
இந்த ஸ்டார்ட்அப் மாநாடு காரணமாக, புதிதாக தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை, பல மடங்கு உயரும் என நம்புகிறோம்.
மாநாட்டுக்கு கல்லூரி மாணவர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. அதில் குறிப்பிட்ட சதவீதத்தினர் ஸ்டார்ட்அப் நோக்கி ஈர்க்கப்பட்டாலே, இம்மாநாட்டுக்கான வெற்றி அபரிமிதமாக இருக்கும்
கோவை போன்ற இன்ஜி., கல்லூரிகள் அதிகம் இருக்கும் பகுதியில் நடந்த இம்மாநாடு, மாணவர்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோவை தொழிற்சூழல் குறித்து மாநாட்டுக்கு வந்திருந்த பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். எனவே, நம்மை நோக்கி தொழில் வாய்ப்புகள் நிச்சயம் வரும்.
சில கல்லூரிகளில், புதிய ஸ்டார்ட்அப்களைத் துவங்குவதற்கு இலக்கு நிர்ணயித்து, மாணவர்களை ஊக்குவித்துள்ளனர்.
எனவே, அடுத்த ஆறு மாதங்களில் ஆயிரம் புதிய ஸ்டார்ட்அப்களாவது உருவாகும் என, நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.