/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுனைடெட் நிறுவனத்தில் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்
/
யுனைடெட் நிறுவனத்தில் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்
ADDED : ஆக 29, 2025 01:34 AM

கோவை: ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைந்து 'சைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்' போட்டிகளை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனத்தில் நடத்தின.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பங்கேற்று, சுகாதாரத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறந்த ஐந்து புதுமையான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
யுனைடெட் கல்வி நிறுவன தலைவர் சண்முகம், கல்லுாரி இயக்குனர் சிவக்குமார், 40 கல்லுாரிகளில் இருந்து, 25 பேராசிரியர்கள், 250 மாணவர்கள் பங்கேற்றனர்.

