/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில தடகள போட்டி; பள்ளி மாணவியர் தேர்வு
/
மாநில தடகள போட்டி; பள்ளி மாணவியர் தேர்வு
ADDED : நவ 06, 2024 09:30 PM

பொள்ளாச்சி ; பள்ளிக் கல்வித்துறையின் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு, காளியாபுரம் பழனிம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் தேர்வாகி உள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, நடப்பு கல்வியாண்டுக்கான குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும் பங்கேற்றனர். அதில், 9ம் வகுப்பு ரமிதா, 3,000 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், பிளஸ் 2 மாணவி ரஞ்சிதா 1,500 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், 10ம் வகுப்பு நிவேதா, 3,000 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், 6ம் வகுப்பு சமீனா, 400 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்து அசத்தினர்.
அதன் வாயிலாக, மாணவிகள், ரமிதா, ரஞ்சிதா ஆகியோர் ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கும் தகுதி பெற்றனர். இவர்களை, பள்ளிச் செயலாளர் சிவக்குமார், இணைச் செயலாளர் நரேந்திரகுமார், தலைமையாசிரியர் சேதுராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், அய்யப்பன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.