/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்
/
மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்
மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்
மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்
ADDED : அக் 26, 2025 02:51 AM
கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான போட்டிகள் கடந்த, 24 முதல், 29ம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
கனமழை எச்சரிக்கை காரணமாக வரும், 29 முதல் நவ., 3ம் தேதி வரை நடக்கிறது. அதாவது, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு வரும், 29 முதல், 31ம் தேதி வரையும்,மாணவர்களுக்கு நவ., 1 முதல், 3ம் தேதி வரையும்,அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.
இதற்கென, மாவட்ட மாணவியர் அணி மேலாளர்களாக மூன்று தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும், மாணவர்கள் அணி மேலாளர்களாக உடற்கல்வி இயக்குனர் உட்பட மூன்று பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து போட்டிகளுக்கும் தனிநபர் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல், மதிப்பெண் பட்டியல், தலைமை ஆசிரியர் சான்றொப்பம் பெற்ற நகல்களை, கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என, மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

