/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து போட்டி; அன்னுார் 2ம் இடம் பிடித்தது
/
மாநில கூடைப்பந்து போட்டி; அன்னுார் 2ம் இடம் பிடித்தது
மாநில கூடைப்பந்து போட்டி; அன்னுார் 2ம் இடம் பிடித்தது
மாநில கூடைப்பந்து போட்டி; அன்னுார் 2ம் இடம் பிடித்தது
ADDED : ஜூலை 30, 2025 08:45 PM

அன்னுார்; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் அன்னுார் அணி இரண்டாம் இடம் வென்றது.
அன்னுாரில், 20 ஆண்டுகளாக, அன்னுார் கூடைப்பந்து கழகம் செயல்பட்டு வருகிறது.
விருதுநகரில் 'வின் ரோஸ் கூடைப்பந்து கழகம்' சார்பில், மாநில அளவிலான நான்கு நாட்கள் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கோவை ராஜலட்சுமி அணியும், அன்னுார் கூடைப்பந்து கழக அணியும் மோதின.
இதில் ராஜலட்சுமி அணி முதலிடம் வென்றது. அன்னுார் கூடைப்பந்து கழக அணி இரண்டாம் இடத்தை வென்றது.
சாதித்த வீரர்களுக்கு பயிற்சியாளர் கார்த்திகேயன் மற்றும் தன்னார்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.