/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில சைக்கிளிங் போட்டி வாகை பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில சைக்கிளிங் போட்டி வாகை பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில சைக்கிளிங் போட்டி வாகை பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில சைக்கிளிங் போட்டி வாகை பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : அக் 23, 2025 11:47 PM

கருமத்தம்பட்டி: மாநில அளவிலான சைக்கிளிங் மற்றும் குத்துச்சண்டை போட்டிக்கு, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
கோவை மாவட்ட அளவில்,14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடந்த, ரோடு சைக்கிளிங் போட்டியில், பங்கேற்ற வாகராயம் பாளையம் மேல்நிலைப்பள்ளி மாணலர் தீபக்குமார் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.
17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், இப்பள்ளி மாணவன் ஆண்டனி ராஜ் , இரண்டாம் இடம் பெற்றார்.
இதேபோல், இதே பள்ளியை சேர்ந்த மாணவி யோவிதா, பெண்கள் பிரிவு சைக்கிளிங் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
17 வயதுக்குட்பட்ட, பிரிவில் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில், இப்பள்ளி மாணவன் ஸ்ரீ ஹரி முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை, தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

