/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு
/
மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு
மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு
மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஆக 20, 2025 09:40 PM
அன்னுார்; மாநில நிதிக்குழு மானியத்தில், அன்னுார் ஒன்றியத்திற்கு, 55 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாநில நிதி குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குறைந்தபட்ச மானியம் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போது ஏப்., மே, ஆகிய இரண்டு மாதங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் உத்தரவு :
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 228 ஊராட்சிகளுக்கு, 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 581 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அன்னுார் ஒன்றியத்தற்கு 55 லட்சத்து 95 ஆயிரத்து 257 ரூபாயும், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு 17 லட்சத்து 9987 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காரமடைக்கு 81 லட்சம் ரூபாயும், பெரியநாயக்கன்பாளையத்திற்கு 48 லட்சம் ரூபாயும், சூலூருக்கு 62 லட்சம் ரூபாயும், சுல்தான்பேட்டைக்கு 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒன்றிய பொது நிதி கணக்கில் வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊராட்சி ஊழியர்கள் கூறுகையில், 'மே மாத நிதி மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் இருந்தது. தற்போது விடுவிக்கப்பட்டதால் வளர்ச்சிப் பணி செய்ய உதவும்,' என்றனர்.