/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜவுளி துறைக்கு மாநில அரசின் ஆதரவு
/
ஜவுளி துறைக்கு மாநில அரசின் ஆதரவு
ADDED : செப் 30, 2025 10:56 PM
உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும், தமிழக அரசு தொடர்ந்து பல கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நூற்பாலைகளை நவீனப்படுத்த 6 சதவீத வட்டி மானியம், ஆயத்த ஆடை தானியங்கி துணி வெட்டும் இயந்திரத்திற்கு 50 சதவீத மூலதன மானியம், சாய தொழிற்சாலைகளை நவீனப்படுத்த 25 சதவீத மூலதன மானியம் மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப ஜவுளி ஆலோசகரை ஈடுபடுத்த 5 சதவீத மானியம் போன்ற சமீபத்திய கொள்கைகள் ஜவுளி தொழிலுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளன.
1998ல் தமிழக அரசு இந்தியாவில் முதன் முறையாக ஒரு தனிப்பட்ட ஜவுளி கொள்கையை அறிவித்து, தமிழகம் இந்தியாவில் ஜவுளித் தொழிலில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து விளங்க வழிவகை செய்து வருகிறது.