/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை திரும்பினார் மாநில கவர்னர்
/
சென்னை திரும்பினார் மாநில கவர்னர்
ADDED : ஏப் 27, 2025 09:18 PM
ஊட்டி : ஊட்டி ராஜ் பவனில் நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான மாநாட்டில் பங்கேற்க, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், 25ம் தேதி ஊட்டிக்கு வந்தார். மாநாட்டை துவக்கி வைத்த பின், மாலையில் முத்தநாடு தோடர் மந்து சென்றார்.
26ம் தேதி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிட்டார். நேற்று காலை ஹெலிகாப்டரில் கோவை சென்ற துணை ஜனாதிபதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதேபோல், ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு தலைமை வகிக்க வந்த, மாநில கவர்னர் ரவி, நேற்று ஊட்டியில் இருந்து கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார். அமைச்சர் சாமிநாதன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.