sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் பதக்கம்

/

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் பதக்கம்

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் பதக்கம்

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள் பதக்கம்


ADDED : பிப் 01, 2024 11:18 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்கள் வென்றனர்.

பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர்.இதில் கோவை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவில் பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டனர்.

எஸ்.டி.ஏ.டி., விடுதியை சேர்ந்த மாணவர்கள் காவியன் (வெண்கலம்), மதிகரண் (2 வெள்ளி), ஹரி பிரசன்னா (தங்கம்), கணேஷ் ராகவ் (தங்கம்), தேவ தர்சன் (2 வெள்ளி), தினேஷ் குமார் (தங்கம்) வென்றனர். இதேபோல், எஸ்.டி.ஏ.டி., யில் பயிற்சி பெறும் மோனிகா (2 வெள்ளி), அக்சரா (வெண்கலம்), மோனீஸ் (வெண்கலம்) ஆகியோரும் பதக்கம் வென்றனர்.

இதில், விடுதி மாணவர்கள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரை கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, மருத்துவர் பாலவெங்கடபெருமாள், ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் சையது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us