ADDED : பிப் 20, 2026 05:48 AM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பள்ளிக்கல்வி துறை சார்பில், மாநில ஹேண்ட்பால் போட்டிகள் ராணிப்பேட்டை டி.எல்.ஆர்., கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி அணி, சேலம் அணியை வென்று, கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதி போட்டியில், ஈரோடு அணியை, 5 கோல்கள் வித்தியாசத்தில் வென்றது. இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் நரசிம்மநாயக்கன்பாளையம் அணி முதலிடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கேசவர் நல்லோர் வட்டம் சார்பில் தாரை தப்பட்டை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரகுநாதன், கேசவர் நல்லோர் வட்ட நிர்வாகிகள் ராஜகோபால், முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் மாணவர்களை பாராட்டினர்.
