/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில ஹேண்ட்பால் போட்டி: அரசு பள்ளியில் அணி தேர்வு
/
மாநில ஹேண்ட்பால் போட்டி: அரசு பள்ளியில் அணி தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டி: அரசு பள்ளியில் அணி தேர்வு
மாநில ஹேண்ட்பால் போட்டி: அரசு பள்ளியில் அணி தேர்வு
ADDED : நவ 28, 2025 03:16 AM
பெ.நா.பாளையம்: டிச., மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவை மாவட்ட அணி தேர்வு நடக்கிறது.
டிச., மாதம், 27 மற்றும்,28ம் தேதிகளில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில்ஹேண்ட் பால் கழகத்தால் மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான ஹேண்ட் பால் போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் கலந்து கொள்ளும், கோவைமாவட்ட அணிகளுக்கான வீரர்களை தேர்வுசெய்யும் போட்டிகள் இம்மாதம், 29ம்தேதி சனிக்கிழமை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை, 10.00 மணிக்கு நடக்கிறது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், பிறப்புச் சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் போனபைடு சான்றிதழ் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.