/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
/
மாணவர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
ADDED : நவ 28, 2025 03:16 AM
: கோவை: கோவையில் கல்லுாரி மாணவர் திடீரென மாயமானார். அவரது பேக் மற்றும் மொபைல் போன் உக்கடம் குளக்கரையில் கிடந்ததால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடுகின்றனர்.
கோவை, தெலுங்குபாளையம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சுபாஷ், 20. இவர் பொள்ளாச்சி ரோட்டிலுள்ள ஒரு கல்லுாரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லுாரியில் வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கேற்றார்.
ஆனால், அவருக்கு வேலைக்கான ஆர்டர் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வபுரம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில், உக்கடம் பெரியகுளத்தின் கரையில், அங்குள்ள கோவில் அருகே, மாணவரின் பேக் மற்றும் மொபைல் போன் கிடந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உக்கடம் பெரிய குளத்திற்குள், மீனவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் நேற்று தேடினர்.
குளக்கரை பகுதியிலுள்ள 'சிசிடிவி கேமரா' காட்சிகளை பார்த்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

