/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவு அடைவுத்திறன்: ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை
/
மாநில அளவு அடைவுத்திறன்: ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை
ADDED : ஆக 03, 2025 08:59 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த மண்ணுார், ராமநாதபுரம், புளியம்பட்டி குறுவள மையங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான மாநில அளவு அடைவுத்திறன் ஆய்வுக் கூட்டம், வடக்கு வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் நேசமணி தலைமை வகித்தார். கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். இதில், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சிறந்த கற்றல் மதிப்பீடு அடைவுத்திறன் கொண்டுள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி விபரங்கள் பார்வையிட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதிப்பீட்டில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னேற்றம் கண்டுள்ள மாணவர்களின் குறிப்பேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இக்கல்வியாண்டிலும் நடைபெற உள்ள மதிப்பீட்டு தேர்விலும் சிறந்த முறையில் அடைவுத்திறன் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், இரு குறுவள மையத்திற்கு உட்பட்ட அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களின் சிறந்த கற்றல் திறன் மேம்பாட்டிற்கு அளித்து வரும் கற்பித்தல் பயிற்சிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்வப்னா மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.