/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவில் திறனறித்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு சான்று
/
மாநில அளவில் திறனறித்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு சான்று
மாநில அளவில் திறனறித்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு சான்று
மாநில அளவில் திறனறித்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு சான்று
ADDED : ஏப் 04, 2025 11:12 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான துளிர் அறிவியல் திறனறித்தேர்வு எழுதியதற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான துளிர் அறிவியல் திறனறித்தேர்வில், பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் துளிர் ஒருங்கிணைப்பாளர் பூபதி, 36 மாணவர்களுக்கு துளிர் அறிவியல் திறனறித்தேர்வுக்கான பாராட்டு சான்றிதழை வழங்கினார். மாணவர் கார்த்தி, சிறப்பு நிலை சான்றிதழ் பெற்றார். முதல்நிலையில், மாணவர்கள் பூபதி, தர்ஷினி, இமயபாரதி, தினேஷ்குமார் ஆகியோர் சான்றிதழ் பெற்றனர். இரண்டாம் நிலையில், 16 மாணவர்கள், மூன்றாம் நிலை சான்று பெற்றனர்.
அறிவியல் ஆசிரியர் கீதா கூறியதாவது:
மாநில அளவிலான துளிர் அறிவியல் திறனறித்தேர்வில், எங்களது பள்ளி மாணவர்கள் 12 ஆண்டுகளாக தேர்வில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றனர்.
கடந்தாண்டில் மாணவர் இயமபாரதி, மாநில அளவிலான முதல் மதிப்பெண் பெற்று ஜி.டி.,நாயுடு மியூசியத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா சென்று வந்தார். இத்தேர்வு எழுதுவதன் வாயிலாக, அறிவியல் மனப்பான்மை, ஏன்?, எதற்கு? எப்படி? என்ற காரண விளக்கங்கள் பெற வேண்டும்.
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள், அன்றாட வாழ்வில் அறிவியல் கருத்துக்கள் பயன்படும் இடங்கள் ஆகியவை புள்ளி விபரமாக தெரிந்து கொள்வதுடன், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் போட்டித்தேர்வு பயன்படும்.
இவ்வாறு, கூறினார்.