/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான கலை விழா; வாகை அரசு பள்ளி அசத்தல் வெற்றி
/
மாநில அளவிலான கலை விழா; வாகை அரசு பள்ளி அசத்தல் வெற்றி
மாநில அளவிலான கலை விழா; வாகை அரசு பள்ளி அசத்தல் வெற்றி
மாநில அளவிலான கலை விழா; வாகை அரசு பள்ளி அசத்தல் வெற்றி
ADDED : ஜன 10, 2025 12:10 AM

கருமத்தம்பட்டி; மாநில அளவிலான கலை விழா போட்டிகளில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான கலை விழா போட்டிகளில் கோவை மாவட்டத்தின் சார்பாக வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மேல்நிலை வகுப்புக்கான இலக்கிய நாடகப் பிரிவில் முதல் இடம் பெற்று அசத்தினர்.
இதேபோல், பம்பை இசைக்கும் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். மணல் சிற்பம் வடிவமைக்கும் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கும் பாராட்டு விழாவில், பங்கேற்க உள்ள மாணவர்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சாதனைக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.