/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான கூடைப்பந்து; பாவை பாலிடெக்னிக் வாகை
/
மாநில அளவிலான கூடைப்பந்து; பாவை பாலிடெக்னிக் வாகை
ADDED : ஜன 31, 2024 11:51 PM
கோவை: பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப்போட்டி நடந்தது. கொங்கு கல்லுாரியை வீழ்த்தி, பாவை கல்லுாரி முதலிடம் பிடித்தது.
ஐ.பி.ஏ.ஏ., (இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்) சார்பில், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் ஜன.,30,31 ஆகிய தேதிகளில் நடந்தது. மண்டல அளவில் நடந்த போட்டியில், முதல் இடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில், சேலம் பாவை பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் மோதின.
போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய, பாவை கல்லுாரி மாணவர்கள், 63 - 26 என்ற புள்ளிக்கணக்கில் கொங்கு அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தனர். மூன்றாமிடத்துக்கான போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 63 - 52 என்ற புள்ளிக்கணக்கில், திருநெல்வேலி பி.ஏ.சி., ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகளை வழங்கினார்.