/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப்; கோவை அணிக்காக 44 வீரர்கள் தேர்வு
/
மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப்; கோவை அணிக்காக 44 வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப்; கோவை அணிக்காக 44 வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப்; கோவை அணிக்காக 44 வீரர்கள் தேர்வு
ADDED : ஏப் 16, 2025 10:25 PM

கோவை; கோவை மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்து விளையாடிய, 44 பேர் மாநில அளவிலான போட்டிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட செஸ் சங்கம் சார்பில், 'கோவை மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப்-2025' போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், இரு நாட்கள் நடந்தது. இப்போட்டியில், 140 சர்வதேச தர வீரர்கள் உட்பட, 561 பேர் பங்கேற்றனர்.
இதில், 7, 9, 11, 13, 15, 17, 19, 25 மற்றும் 'ஓபன்' பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் அதிக புள்ளிகள் குவித்த, 'டாப்' 15 வீரர்கள், 10 வீராங்கனைகள் என, 25 பேருக்கு என ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்து, 200 பேருக்கு 'டிராபி' பரிசாக வழங்கப்பட்டது. தவிர, 'டாப்' 18 பேருக்கு ரூ.23 ஆயிரத்து, 500 ரொக்கம் வழங்கப்பட்டது.
சர்வதேச நடுவர் விஜயராகவன், போட்டிகளை நடத்திய நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு, ஏழு முறை மாவட்ட சாம்பியன்ஷிப் வென்ற வீரர் முத்துசாமி, பரிசுகள் வழங்கினார்.
இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட, 44 பேர் மாநில அளவில் நடக்கும் போட்டியில், கோவை அணி சார்பில் விளையாடவுள்ளனர்.
மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர், 'ஓபன்' பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி உள்ளிட்டோர், பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.