/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்வையற்றோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி
/
பார்வையற்றோருக்கான மாநில அளவிலான செஸ் போட்டி
ADDED : ஏப் 21, 2025 06:08 AM

கோவை: தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் நடந்த, மாநில செஸ் போட்டியில், 32 பேர் அபாரமாக விளையாடினர்.
தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் கிழக்கு, தியா சோசியல் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான செஸ் போட்டி பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், நேற்று நடந்தது.
போட்டியில், 19, 21, 23 வயதுக்குட்பட்டோர், 'ஓபன்' என பல்வேறுபிரிவுகளில்கன்னியாகுமாரி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 32 பேர் பங்கேற்றனர். கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர் ராமசாமி, போட்டிகளை துவக்கிவைத்தார்.
ஐந்து சுற்றுக்களாக போட்டி நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், ஆலோசகர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

