/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான கிரிக்கெட் கிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்
/
மாநில அளவிலான கிரிக்கெட் கிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்
மாநில அளவிலான கிரிக்கெட் கிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்
மாநில அளவிலான கிரிக்கெட் கிருஷ்ணா கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 07, 2024 01:33 AM

கோவை;கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், கடந்த 5ம் தேதி துவங்கியது.
வரும் 13ம் தேதி வரை கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.
போட்டியை, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் துவக்கி வைத்தார்.
நேற்று நடந்த போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி (ஜி.சி.டி.,) மற்றும் பி.எஸ்.ஜி., டெக் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணியின் பிரனேஷ் (50) அரைசதம் அடிக்க, அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் சேர்த்தது.
ஜி.சி.டி., அணியின் விக்கி, மூன்று விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய ஜி.சி.டி., அணியினர் 17.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வீழ்த்தியது.

