sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்

/

மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்

மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்

மாநில அளவிலான கிரிக்கெட்: கற்பகம், சி.எம்.எஸ்., அபாரம்


ADDED : பிப் 08, 2024 06:34 AM

Google News

ADDED : பிப் 08, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், கற்பகம் இன்ஜி., கல்லுாரி மற்றும் சி.எம்.எஸ்., கல்லுாரி அணிகள் அபாரமாக விளையாடி, அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.

நேற்று நடந்த நாக் அவுட் சுற்றுப்போட்டியில், கே.சி.டி., மற்றும் சி.எம்.எஸ்., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.சி.டி., 19.2 ஓவர்களில் 103க்கு ஆல் அவுட் ஆனது. சி.எம்.எஸ்., அணியின் அருண் குமார் சிறப்பாக பந்து வீசி, நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய சி.எம்.எஸ்., கல்லுாரியின் துவக்க வீரர் பிரவீன் குமார் (62*), அதிரடியாக விளையாட, சி.எம்.எஸ்., அணி 14.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நேற்று மதியம் நடந்த மற்றொரு போட்டியில், கற்பகம் இன்ஜி., கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி அணிகள் போட்டியிட்டன.

இதில் முதலில் பேட்டிங் செய்த கற்பகம் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 126 ரன்கள் சேர்த்தது. அணிக்காக சபரீஷ் 33 ரன்கள் எடுத்தார்.

வெற்றி பெற 127 ரன்கள் தேவை என்ற இலக்குடன், களமிறங்கிய எஸ்.ஆர்.எம்.வி., அணியினர் சபரி (நான்கு விக்கெட்), அஷ்வின் பாபு (மூன்று விக்கெட்) ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.






      Dinamalar
      Follow us