/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டி; சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்
/
மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டி; சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்
மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டி; சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்
மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டி; சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்
ADDED : அக் 16, 2024 12:12 AM
கோவை : பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் நடந்த, மாநில அளவிலான நீச்சல் போட்டியில், சென்னை அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' வென்றது.
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் 'சாம்பியன்ஷிப்' போட்டி, அமிர்தா பல்கலையில் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பார்வையற்றோர் உட்பட பல்வேறு பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகள் பிரிக்கப்பட்டு, 50 மீ., 100 மீ., 150 மீ., பிரீ ஸ்டைல், பேக் ஸ்டிரோக், பட்டர்பிளை ஸ்டிரோக் மற்றும், 200 மீ., தனிநபர் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளின் முடிவில், 317 புள்ளிகளுடன் சென்னை அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' கோப்பையை வென்றது.
சேலம் அணி, 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. போட்டியில் வெற்ற பெற்றவர்கள், கோவாவில் நடைபெறும், தேசிய பாரா நீச்சல் 'சாம்பியன்ஷிப்' போட்டிக்கு, தகுதி பெற்றுள்ளனர். வீரர், வீராங்கனைகளுக்கு பாரா ஒலிம்பிக் சங்க தேசிய துணை தலைவர் சந்திரசேகர் பதக்கம், கோப்பை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில், பொதுச் செயலாளர் கிருபாகராஜா, கோவை மாவட்ட சங்க தலைவர் ஷர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.