/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு
/
இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு
இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு
இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு
ADDED : நவ 10, 2025 11:53 PM

நெகமம்: நெகமம், ஜக்கார்பாளையம் தனியார் வேளாண் பண்ணையில், விவசாயிகளுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.
நெகமம், ஜக்கார்பாளையம் தனியார் வேளாண் பண்ணையில், பாரதிய பிரகிருதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி வரவேற்றார். மேலும், தோட்டக்கலை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.
பூச்சியியல் நிபுணர் செல்வம் பேசுகையில், பூச்சிகள் சார்ந்த தகவல், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், பூச்சி மேலாண்மை, குளவிகளின் வகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் கவினோ, இயற்கை உரம் மற்றும் மண்ணின் வளம் பெருக்குதல் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இயற்கை விவசாயி சம்பத்குமார், இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்தல், மூன்று அடுக்கு பயிர் சாகுபடி முறைகள், உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு, ஆனைமலை வேளாண் அலுவலர்கள் மற்றும் பல மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

