/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அதிநவீன 'டயாலிசிஸ்' மையம்
/
பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அதிநவீன 'டயாலிசிஸ்' மையம்
பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அதிநவீன 'டயாலிசிஸ்' மையம்
பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் அதிநவீன 'டயாலிசிஸ்' மையம்
ADDED : பிப் 22, 2024 05:57 AM

கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சிறுநீரக நல சிகிச்சைத்துறை நோயாளிகளுக்காக, 15 படுக்கைகளுடன், நவீனமயமாக்கப்பட்ட 'டயாலிசிஸ்' மையம் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில், பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சேர்மன் மையத்தை திறந்து வைத்தனர்.
மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் மற்றும் சிறுநீரக நல சிகிச்சைத்துறை தலைமை மருத்துவர் வேணு மற்றும் இணை மருத்துவர்கள் வசந்த், அறிவழகன் பங்கேற்றனர்.
அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''1990ம் ஆண்டு பி.எஸ்.ஜி., அறக்கட்டளை சேர்மன் கார்த்திகேயன், இரு டயாலிசிஸ் இயந்திரங்களை தானமாக அளித்தார். அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, சுமார் 30 இயந்திரங்களுடன் செயல்பட்டு வந்தது.
தற்போது மேலும், 15 அதிநவீன இயந்திரங்கள் அதிகரிக்கப்பட்டு, 45 இயந்திரங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு, அங்கேயே டயாலிசிஸ் செய்யும் வசதியும் உள்ளது,'' என்றார்.