/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வி.ஜி.எம்., மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை தளம்
/
வி.ஜி.எம்., மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை தளம்
வி.ஜி.எம்., மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை தளம்
வி.ஜி.எம்., மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை தளம்
ADDED : ஜூலை 24, 2025 08:40 PM

கோவை; கோவை வி.ஜி.எம்., மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தளத்தை, அமெரிக்கா விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலை கல்லீரல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் அருண் சன்யால் துவக்கிவைத்தார்.
இதில், வி.ஜி.எம்., மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறியதாவது:
இந்தியாவில் மெடபாலிக் சிண்ட்ரோம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அறிகுறி தெரியாமல் ஆண்டுக்கணக்கில் பாதிக்கப்படுவதால், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயாளிகளாக மாறும் சூழல் உள்ளன.
ஆண்டுதோறும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 3,500 முதல் 4000 பேருக்கு மட்டுமே நடக்கின்றன. இது வெறும் அறுவைசிகிச்சை கூடம் அல்ல; தொலைநோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள தளம். மலிவான செலவில் உலகத் தரம் வாய்ந்த பராமரிப்பு, ஆய்வு, பயிற்சி, ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்நோக்கு தளமாக அமைந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்வில், வி.ஜி.எம்., மருத்துவமனையின் எண்டோஸ்கோபி துறையின் இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, ஹெப்பாட்டோலாஜி துறை சிறப்பு நிபுணர் டாக்டர் மித்ரா, ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.