/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுரையீரல் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள்
/
நுரையீரல் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள்
ADDED : ஜூலை 10, 2025 10:13 PM
'ஆண், பெண் என இருபாலருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களுக்கு புகைப்பழக்கத்தாலும், பெண்களுக்கு மரபு வழியாகவும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தகுமார் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
சமீபகாலமாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களுக்கு புகைப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மரபு வழியாக பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர் இருமல், இருமும் போது ரத்தம் வெளியேறுதல், எடை குறைவது, நெஞ்சுப்பகுதியில் வலி ஆகியவை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு தீவிரம் அடைந்தால் மட்டுமே கண்டறியும் நிலை இருந்தது. ஆனால், தற்போது சி.டி., ஸ்கேன் பரிசோதனை வாயிலாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும். புகைப்பழக்கம் உடையவர்கள், குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பவர்கள் இப்பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனைகளில், 75 முதல் 80 சதவீதம் கட்டிகள் கண்டறியப்படுகிறது. மிகச்சிறிய கட்டிகளை கண்டறிய சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. பரிசோதனையும் எளிதாகிறது. உரிய நேரத்தில் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
நவீன சிகிச்சை முறையாக, மூச்சுக்குழாய் வழியாக சிறிய கேமராவை செலுத்தி, நுரையீரலில் உள்ள கட்டிகளை கண்டறியும் ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இது எண்டோஸ்கோபி போன்ற சிகிச்சை முறை என்றாலும், இதில் சிறிய அளவில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக, அட்வான்ஸ் ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சை உள்ளது. இது சாதாரண ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சை மையங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்கு நவீன கருவிகள் தேவைப்படுகிறது. கே.எம்.சி.எச்.,ல் இதற்கான அனைத்து நவீன கருவிகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கூறினார்.