ADDED : மார் 04, 2024 12:36 AM
அ நிறம் | அளவு
கோவை:கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், '17வது பி.எஸ்.ஜி., கோப்பை'க்கான மாநில அளவில், 'செபக்- தக்ரா' போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், கோவை, கேரளா, திருநெல்வேலி, சென்னை, ஆந்திரா, பி.எஸ்.ஜி., முன்னாள் மாணவர்கள் அணி என, 17 அணிகள் பங்கேற்று, சீனியர் 'ரெகு', 'சீனியர் குவாட்ரன்ட்', ஜூனியர் ரெகு என, மூன்று பிரிவுகளில் போட்டியிட்டன.
'சீனியர் ரெகு' பிரிவில் ஆர்23 அணி 2 - 0 என்ற செட் கணக்கில் டாக்ட் அணியையும், பைட் கிளப் அணி 2 - 0 என்ற செட் கணக்கில் கிங்ஸ் யுனைடெட் அணியையும் வீழ்த்தின.
சீனியர் குவாட்ரன்ட் பிரிவில், பைட் கிளப் அணி 2 - 0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., டெக் அலுமினி அணியையும், ஆர்23 அணி 2 - 0 என்ற செட் கணக்கில், காட்ஸ் ரீயின் அணியையும் வீழ்த்தின.
