/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில விளையாட்டு போட்டி: அன்னுார் மாணவர்கள் தகுதி
/
மாநில விளையாட்டு போட்டி: அன்னுார் மாணவர்கள் தகுதி
ADDED : அக் 29, 2024 09:17 PM
அன்னுார்: குடியரசு தின விளையாட்டுப் போட்டியில், அன்னுார் மாணவர்கள் மாவட்ட அளவில், முதலிடம் பெற்றுள்ளனர்.
கோவை நேரு ஸ்டேடியத்தில், பாரதியார் விழா மற்றும் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதில் கணேசபுரம், ஸ்ரீ பாரதி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சஞ்சய், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், கீர்த்தி வாசன், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், ஈட்டி எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
வரும் நவம்பரில் ஈரோட்டில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.