/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கைப்பந்து போட்டி; காந்திமன்றம் அணி வெற்றி
/
மாநில கைப்பந்து போட்டி; காந்திமன்றம் அணி வெற்றி
ADDED : டிச 24, 2024 10:06 PM

வால்பாறை; வால்பாறையில் நடந்த, மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், சின்கோனா(டான்டீ) காந்திமன்றம் அணி வெற்றி பெற்றது.
சுவாமி விவேகானந்தர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சேடல்டேம் நண்பர்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 16 அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில், வால்பாறை பா.ஜ., இளைஞரணியும், வால்பாறை சின்கோனா காந்திமன்றம் அணியும் மோதின. இதில் காந்திமன்றம் அணி அபாரமாக விளையாடி, முதல் பரிசு மற்றும் கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு, பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், பா.ஜ., மண்டல் தலைவர் பாலாஜி, மண்டல் துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

