/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கைப்பந்து போட்டி; எஸ்.ஆர்., கிளப் வெற்றி
/
மாநில கைப்பந்து போட்டி; எஸ்.ஆர்., கிளப் வெற்றி
ADDED : மார் 18, 2025 11:09 PM

வால்பாறை; மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், வால்பாறை எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) ரயான் டிவிஷன் நேருஜி மன்றத்தின் சார்பில், 27ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில், கோவை, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில், வால்பாறை எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் (ஏ) அணியும், நேருஜி ரயான் அணியும் மோதின. இதில், எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு, முதல் பரிசாக, 20,001 ரூபாய் மற்றும் சுழற்க்கோப்பை வழங்கப்பட்டது. ரயான் நேருஜி அணிக்கு, இரண்டாவது பரிசாக, 10,001 ரூபாய் வழங்கப்பட்டது.
இதே போல்,எஸ்.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் (பி) அணிக்கு மூன்றாவது பரிசாக, 5,001 ரூபாயும், நான்காவது பரிசாக சேலம் அணிக்கு 3,001 ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. பரிசை தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் வழங்கினார்.