/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில வாலிபால் போட்டி: தஞ்சாவூர் பள்ளி சாம்பியன்
/
மாநில வாலிபால் போட்டி: தஞ்சாவூர் பள்ளி சாம்பியன்
மாநில வாலிபால் போட்டி: தஞ்சாவூர் பள்ளி சாம்பியன்
மாநில வாலிபால் போட்டி: தஞ்சாவூர் பள்ளி சாம்பியன்
ADDED : ஜன 14, 2026 06:48 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி விளையாட்டுத்துறை சார்பில், 13வது ஆண்டு மாநில அளவிலான எஸ். டி.சி. நிறுவன்கள் நினைவு வாலிபால் போட்டி நடந்தது.
இதில், எட்டு பள்ளி அணிகள் பங்கேற்றன. 'லீக்' போட்டியின் முடிவில், நான்கு அணிகள், அரையிறுதி போட்டிக்கு முன்னேறின. முதலாவது அரையிறுதி போட்டியில், தஞ்சை செயின்ட் ஆண்டனி மேல்நிலைப்பள்ளி அணியினர், நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி அணியினரை, 3:2 என்ற செட்களில் வென்றனர். இரண்டாவது அரையிறுதி போட்டியில் திருநெல்வேலி அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியினர், துாத்துக்குடி போப் மேல்நிலைப்பள்ளி அணியினரை, 3:1 என்ற செட்களில் வென்றனர்.
இறுதி போட்டியில் தஞ்சாவூர் செயின்ட் ஆண்டனி மேல்நிலைப்பள்ளி அணியினர், 3:2 என்ற செட்களில் நெல்லை அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இரண்டாமிடத்தை, அப்துல் ரகுமான் பள்ளி பெற்றது. மூன்றாம், நான்காமிடத்துக்கான போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி, 3:1 என்ற செட்களில், துாத்துக்குடி போப் பள்ளி அணியினரை வென்றனர்.
பரிசளிப்பு விழாவில், கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, கல்லுாரி துணை முதல்வர் பாரதி, தமிழ்நாடு வாலிபால் சங்க இணை செயலாளர் செல்லமுத்து பங்கேற்றனர்.

