/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., திட்டம் உருவாக்கியவர்களுக்கு புகழ் சேர்க்க சிலைகள் அமைப்பு
/
பி.ஏ.பி., திட்டம் உருவாக்கியவர்களுக்கு புகழ் சேர்க்க சிலைகள் அமைப்பு
பி.ஏ.பி., திட்டம் உருவாக்கியவர்களுக்கு புகழ் சேர்க்க சிலைகள் அமைப்பு
பி.ஏ.பி., திட்டம் உருவாக்கியவர்களுக்கு புகழ் சேர்க்க சிலைகள் அமைப்பு
ADDED : ஆக 10, 2025 10:20 PM
பொள்ளாச்சி, ;; 'ஆசியாவின் அதிசய திட்டம் பி.ஏ.பி., திட்டம் தந்த தலைவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் உறுப்பினர்கள் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பெரியாறு, சாலக்குடி, பாரதபுழா ஆகிய மூன்று ஆற்று படுகைகளும், கடல் மட்டத்தில் இருந்து உயரம் வித்தியாசமானது.
இந்த மூன்று ஆறுகளும் சுரங்கபாதை வாயிலாக இணைத்து அந்த நீர் சமவெளிபகுதிக்கு கொண்டு வருவது என்பது உலகத்தில் எங்கேயும் இருக்கிற மாதிரியான செய்திகள் இல்லை. இத்திட்டம் உருவாக்கிய பிதாமகன்களுக்கு சிலைகள் அமைத்தல், நினைவு அரங்கம் அமைப்பது புகழ் வாய்ந்த விஷயமாகும்.
மேலும், அக். 7ம் தேதி பி.ஏ.பி., தினமாக கடைபிடித்து திட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா நடைபெறும் என அறிவித்து செயல்படுகிறது. இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே போன்று, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தினால் பயனாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வளம் பெற செய்தவர்களுக்கு சிறப்பு கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் கூறியதாவது:
ஆசியாவின் பொறியியல் அதிசயமான பி.ஏ.பி., பாசன திட்டம் விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள்எதுவும், பயன்பாட்டில் இல்லாத அக்கால கட்டத்தில் பொறியியல் திறமை மற்றும் மனித உழைப்பு, ஆற்றலை பிரதானமாக கொண்டு உருவாக்கப்பட்டது. எட்டு சுரங்கப்பாதைகள், நான்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள், 10 கால்வாய்கள், 50 கி.மீ., சமமட்ட கால்வாய்கள் என அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதி, கல்லாறு அணையை பார்வையிட்டு, வழிந்து ஓடும் நீர், கேரளாவுக்கு சென்று கடலில் கலக்கிறது. அவர், அற்புத திட்டமாக உருவாக்கியது நீராறு மின் உற்பத்தி திட்டமாகும்.
பி.ஏ.பி., திட்டம் தந்த காமராஜர், பழனிச்சாமி, சுப்ரமணியம், மகாலிங்கம் ஆகியோருக்கு புகழ் சேர்த்திட திருவுருவச்சிலைகள் அமைக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த சிலை அவர் திறந்து வைக்க வர உள்ளார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

