/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நிலை... எல்லாம் 'ஓகே?' மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சோதனை
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நிலை... எல்லாம் 'ஓகே?' மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சோதனை
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நிலை... எல்லாம் 'ஓகே?' மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சோதனை
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நிலை... எல்லாம் 'ஓகே?' மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சோதனை
ADDED : ஜன 10, 2026 05:06 AM

கோவை ;சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி கலெக்டர் சோதித்து பார்த்தார்.
கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில், 3,563 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கேற்ப மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திலுள்ள கிடங்கில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கடந்த 4ம் தேதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மஸ்துதாஸ், ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் பவன்குமார், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி சரி பார்த்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உடன் இருந்தனர்.
சுழற்சி முறையிலும், இருப்பு வைத்துள்ள ஓட்டு எண்ணிக்கையின் சதவீத அடிப்படையிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி பார்க்கப்பட்டது.
அனைத்தும் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, சீலிடப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'கோவையிலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான, 8,391 பேலட் யூனிட்கள், 5,245 கன்ட்ரோல் யூனிட்டுகள், 5,885 வீவீ பேட் இயந்திரங்கள் என்று மொத்தம், 19,521 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுப்பதிவின்போது பழுது ஏற்பட்டால், மாற்றாக வழங்க 25 சதவீத இயந்திரங்கள் தயாராக வைக்கப் பட்டுள்ளன' என்றனர்.

