/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணை வீடுகளில் பாதுகாப்பா இருங்க!
/
பண்ணை வீடுகளில் பாதுகாப்பா இருங்க!
ADDED : மே 09, 2025 06:55 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் தனியாக இருக்கும் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் பண்ணை வீடுகள் மற்றும் விவசாய நிலத்தில் தனியாக இருக்கும் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளது. இப்பகுதியில் திருட்டு சம்பவங்களை தவிர்க்க பேரூர் உட்கோட்டம் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு எஸ்.ஐ., பாரதநேரு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
டி.எஸ்.பி., பேசியதாவது:
திருட்டு கும்பல், வீடுகளை கண்காணித்து, விற்பனையாளர் போல் வீட்டை நோட்டமிட்டு வருவார்கள். அதன்பின் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள். இதை தவிர்க்க, பண்ணை வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகளில் முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் அமைக்க வேண்டும். வீடுகள் தோறும் நாய் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.
மேலும், ஆட்கள் இல்லாத பண்ணை வீடுகளில் வசதி உள்ளவர்கள் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். வீட்டில் அதிகளவு பணம் மற்றும் நகை வைத்திருந்தால் அதை உடனடியாக பேங்க் லாக்கரில் வைத்து பராமரிக்க வேண்டும்.
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தால், கண்காணிப்பு செய்யப்படும்.
இவ்வாறு, பேசினார்.