/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.பி. அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டத்தில் பரபரப்பு
/
எஸ்.டி.பி. அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டத்தில் பரபரப்பு
எஸ்.டி.பி. அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டத்தில் பரபரப்பு
எஸ்.டி.பி. அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஆக 19, 2025 01:54 AM

கோவை; சின்னவேடம்பட்டி ஏரியில் எஸ்.டி.பி., அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (எஸ்.டி.பி.,) அமைப்பது தொடர்பான செயல்விளக்க கூட்டம், ஆர்.எஸ்., புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் விவசாய சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே, அங்கு எஸ்.டி.பி., அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில், விவசாயிகள் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு கமிஷனர் விளக்கம் அளித்தார். அப்போது, பலர் எஸ்.டி.பி., அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களும் எழுப்பினர். சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, விவசாயிகள் பேசியதாவது:
திட்டத்தின் கொள்ளளவு, 9 எம்.எல்.டி., எனக்குறிப்பிட்டு, வருகை பதிவேட்டில் அனைவரிடமும் கையெழுத்து பெற்று விட்டு, திட்டத்தின் செயல் விளக்கத்தில், 3 எம்.எல்.டி., மட்டுமே என்று குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி ஏற்கனவே நொய்யலை கடுமையாக மாசுபடுத்தி உள்ளது. நீர்வள ஆதாரத்துறையிடம் இருந்து, 9 குளங்களை கேட்டுப்பெற்று, கழிவு நீரை சுத்திகரித்து தேக்குகிறோம் என்கிற பெயரில் அனைத்து குளங்களையும் மாசுபடுத்தி உள்ளது. இந்நிலையில், சின்னவேடம்பட்டி நன்னீர் குளத்தில் எஸ்.டி.பி., அமைப்பதாக தெரிவித்து வருகிறீர்கள். ஏற்கனவே அமைக்கப்பட்டு எஸ்.டி.பி., நிலையங்கள் அனைத்தும், கடமைக்கு செயல்பட்டு கழிவுநீரை சுத்திகரிக்காமல் மீண்டும் நொய்யலிலேயே விடப் படுகிறது.
சின்னவேடம்பட்டி நன்னீர் குளத்தில் அப்படி நடக்கக்கூடாது. ஏரியை தவிர வேறு பகுதிகளில் எஸ்.டி.பி., அமைக்க பரிசீலிக்க வேண்டும். இல்லையேல், அனைத்து போராட்டங்களை அறவழியில் முன்னெடுப்போம்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.