எஸ்.டி.சி. நிறுவனர் நினைவு மாநில போட்டி துவக்கம்
எஸ்.டி.சி. நிறுவனர் நினைவு மாநில போட்டி துவக்கம்
ADDED : ஜன 09, 2026 06:18 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான எஸ்.டி.சி. நிறுவனர்கள் நினைவு வாலிபால் போட்டி நேற்று துவங்கியது.
நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. பள்ளி, நெல்லை விளையாட்டு விடுதி, தஞ்சை விளையாட்டு விடுதி, துாத்துக்குடி போப் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சீர்காழி, திட்டச்சேரி, நாகபட்டிணம் உள்ளிட்ட எட்டு பள்ளி அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடைபெறுகின்றன. போட்டியை கல்லுாரி துணை தலைவர் விஜயமோகன், கல்லுாரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லுாரி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கோமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் துணை முதல்வர் பாரதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்து வருகின்றனர்.
