/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.சி. நினைவு பூப்பந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற டி.ஏ. பள்ளி
/
எஸ்.டி.சி. நினைவு பூப்பந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற டி.ஏ. பள்ளி
எஸ்.டி.சி. நினைவு பூப்பந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற டி.ஏ. பள்ளி
எஸ்.டி.சி. நினைவு பூப்பந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற டி.ஏ. பள்ளி
ADDED : ஆக 18, 2025 09:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், 13வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான எஸ்.டி.சி. நிறுவனர்கள் நினைவு பூப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
தமிழகத்தில் இருந்து, 12 பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள், லீக் முறையில் நடந்தது. 'ஏ' மற்றும் 'பி' பிரிவில் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றிய நான்கு அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டி, 'நாக் அவுட்' முறையில் நடந்தது.
முதல் அரையிறுதி போட்டியில், திருவிடைமருதுார் டி.ஏ. மேல்நிலைப்பள்ளி அணி, 2:1 என்ற செட்களில், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில், மதுரை திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அணி, 2:0 என்ற நேர்செட்களில், ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.
இறுதி போட்டியில், டி.ஏ. மேல்நிலைப்பள்ளி அணி, 2:0 என்ற நேர்செட்களில், மதுரை திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அணியை விழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மூன்று மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டியில், மாமல்ல புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 2:1 என்ற நேர் செட்களில், ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.
பரிசளிப்பு விழாவில், கல்லுாரி துணை தலைவர் விஜயமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வனிதாமணி பேசினார். தேசிய விளையாட்டு வீரரும், எஸ்.டி.சி.யின் முன்னாள் மாணவருமான நவீன்குமார், வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகை, கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் பாரதி மற்றும மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.