/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவரிடம் வழிப்பறி; திருநங்கைகள் கைது
/
மாணவரிடம் வழிப்பறி; திருநங்கைகள் கைது
ADDED : ஜன 30, 2024 12:14 AM
கோவை;மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் விஷால் ராஜ், 19. இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விஷால் ராஜ், தனது நண்பர்களுடன் காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பாலசுந்தரம் ரோட்டில் சென்ற போது, அவர்களுக்கு பின்னால் மொபட்டில் வந்த திருநங்கைகள் சிலர், விஷால் ராஜ் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
பின் அவரை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர். விஷால் ராஜ் புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் நகையை பறித்தது திருநங்கைகளான கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுதர்சனா என்கிற விக்னேஷ், 20, ஆதித்யா என்கிற அருண், 24, ஆகியோர் என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.