/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு 'ஸ்டெப்பிங் ஸ்டோன்'
/
கல்லுாரி மாணவர்களுக்கு 'ஸ்டெப்பிங் ஸ்டோன்'
ADDED : பிப் 04, 2025 01:01 AM

கோவை; நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 'ஸ்டெப்பிங் ஸ்டோன்' மெகா தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை, தென் இந்தியா சமையல் நிபுணர்கள் சங்கம் மற்றும் ஆர்.கே.ஜி., நெய் ஆகியவை நிகழ்ச்சியை நடத்தின.
உணவக மற்றும் ஹோட்டல் துறையில், புகழ்பெற்ற வல்லுனர்கள் தொழில் வளர்ச்சி, வணிக யுக்திகள் மற்றும் தொழில் நுணுக்கங்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விவாதங்கள், குழு கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
தென் மாநில சமையல் நிபுணர்கள் சங்க தலைவர் தாமோதரன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை செயலர் பிரியா, ஹோட்டல் மேலாண்மை துறையின் தலைவர் பிரேம் கண்ணா, தென் இந்தியா சமையல் நிபுணர்கள், சங்க உறுப்பினர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

