UPDATED : நவ 01, 2026 07:26 PM
ADDED : நவ 01, 2026 07:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், காய்கறி பயிர்களில் குச்சி கட்டுதல் அமைக்க, ெஹக்டருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி தெற்கு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை:
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில், குச்சி கட்டுதலுக்கு, ெஹக்டருக்கு, 50 சதவீதம் மானியமாக, 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தக்காளி, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் உள்ளிட்ட கொடிவகை காய்கறி பயிர்களில் குச்சி கட்டுதல் வாயிலாக, கொடிகள் நன்கு வளர்ந்து காய்கள் தரையுடன் தொடர்பு கொள்வது குறைகிறது. இதனால், காய்கறிகளின் தரம் மேம்படுவதுடன் அறுவடை பணிகளும் எளிதாகின்றன.
மேலும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைப்பதால் நோய் தாக்குதலை குறைக்கவும், தரமான காய்கறியை பெறவும் உதவுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது பகுதி தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள், தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
விவசாயிகள் குச்சி கட்டுதல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, அரசு வழங்கும் மானிய உதவியை பயன்படுத்தி சாகுபடியில் கூடுதல் வருமானம் பெறலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
