/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு 'ஸ்டிக்கர்'
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு 'ஸ்டிக்கர்'
ADDED : பிப் 12, 2025 11:16 PM
பொள்ளாச்சி; தைப்பூச திருவிழாவுக்காக, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழநி நோக்கி சென்று திரும்புகின்றனர். அவர்களின் பாதுகாப்பான பாதயாத்திரை வேண்டி, பல்வேறு தன்னர்வ அமைப்பு வாயிலாக, தண்ணீர் பாட்டில், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில், சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி, தைப்பூச ஆறுமுக ரத பழநி பாதயாத்திரை குழுவினருக்கு ஒளிபிரதிபலிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது.
தவிர, பேண்டு போன்ற ஒளிபிரதிபலிப்பான் கைகளில் கட்டப்பட்டது. பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ரோட்டோரமாக செல்ல வேண்டும்; பாதுகாப்பாகவும் கவனமுடன் செல்ல வேண்டும். இரவு நேர பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.

