/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடீரென வீட்டுக்குள் வந்த திருட்டு நகை!
/
திடீரென வீட்டுக்குள் வந்த திருட்டு நகை!
ADDED : ஜன 22, 2025 11:54 PM
தொண்டாமுத்தூர்; புத்தூர், புதுக்காலனியை சேர்ந்தவர் முருகம்மாள்,50; கூலித்தொழிலாளி. இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 12ம் தேதி, முருகம்மாள் அருகில் உள்ள அக்காவின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு, மறுநாள் காலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வழக்கமாக வைக்கும் இடத்தில், வீட்டின் சாவி இல்லாமல் வேறு இடத்தில் இருந்தது. சந்தேகமடைந்து, வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 19 கிராம் நகைகள் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். பின், போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்காக, தனது அக்காவை அழைக்கச் சென்று விட்டு மீண்டும், வீட்டுக்கு வந்தார். அப்போது, மாயமான நகையில், 15 கிராம் நகையை, மர்ம நபர் ஜன்னல் வழியாக வீசிச்சென்றது தெரியவந்தது.
ஆனாலும், முருகம்மாள் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

