ADDED : ஜன 23, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர், ஓதிமலை பாதையில் உள்ள பழமையான கரி வரதராஜ பெருமாள் கோயிலில், கடந்த 19ம் தேதி பட்டப் பகலில், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி சடாரியை யாரோ திருடி சென்று விட்டனர்.
கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 'சிசி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தற்போது சரவணம்பட்டியில் தங்கி உள்ள ஜெயகிருஷ்ணன், 48. என்பவர் வெள்ளி சடாரியை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து எஸ்.ஐ., அப்துல் முத்தலிப் தலைமையிலான போலீசார் ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெள்ளி சடாரி மீட்கப்பட்டது. வேறு இடங்களிலும் திருடியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
