/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுங்க! விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
/
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுங்க! விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுங்க! விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுங்க! விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 24, 2025 10:37 PM

அன்னுார்; 'நொய்யல் ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்,' என விவசாயிகள் சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், அன்னுாரில் விவசாயிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகம் பேசுகையில், ''அத்திக்கடவு திட்த்தில், 1,000க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன.
அரசு விரைவில் அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடை செய்ய வேண்டும்,'' என்றார். கூட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்க்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்துக்கு வரும் ஆறுகளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
பாமாயில் இறக்குமதியை தடை செய்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நிபந்தனை இல்லாமல் வேளாண் தொழிலுக்கு மாற்ற வேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு 80 ரூபாய் வழங்க வேண்டும். நொய்யல் ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜூலை 5ம் தேதி சூலுாரில் நடைபெறும் பேரணி மற்றும் மாநாட்டில் அன்னுார் ஒன்றியத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, மாவட்ட பொருளாளர் அன்னுார் மோகன், ஏர்முனை அமைப்பு நிர்வாகிகள் சுரேஷ், மாணிக்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.