/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதை பாலப்பணிகள் நிறுத்தம்? தகரம் வைத்து பாதை அடைப்பு
/
நடைபாதை பாலப்பணிகள் நிறுத்தம்? தகரம் வைத்து பாதை அடைப்பு
நடைபாதை பாலப்பணிகள் நிறுத்தம்? தகரம் வைத்து பாதை அடைப்பு
நடைபாதை பாலப்பணிகள் நிறுத்தம்? தகரம் வைத்து பாதை அடைப்பு
ADDED : ஏப் 08, 2025 10:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் ரயில்வே சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் மேற்கொண்ட பகுதியில் தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வடுகபாளையம் பகுதி மக்கள் வந்து செல்லும் வகையில், பாலக்காடு ரோட்டில் நடைபாதை பாலம் அமைக்க கடந்த, 2023ம் ஆண்டு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் அருகே அமைக்கப்படும் சுரங்கவழி நடைபாதையாக அமைக்காமல், வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது மக்கள், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் நான்கு வழி மேம்பாலத்தின் கீழே நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைக்க வேண்டும். நடைபாதை பாலமாக அமைத்தால், மது குடித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்படும் என எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நடைபாதை பாலப்பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. தற்போது அந்த இடத்தில் தகரம் வைத்து அடைக்கப்பட்டு புதர் மண்டி காணப்படுகிறது.
நடைபாதை பாலத்தில், வாகனங்கள் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி கட்டினால் பயனாக இருக்கும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், பணிகளை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக தெரிகிறது, என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளும் பணியை வேகப்படுத்த வேண்டும். கோரிக்கையை ஏற்று, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

