/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பிடித்தது
/
மின்கம்பியில் உரசியதில் வைக்கோல் தீப்பிடித்தது
ADDED : பிப் 07, 2025 10:01 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தாத்துார் பி.எஸ்.ஏ., நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே, மணி என்பவரது தோட்டத்துக்கு, 100 கட்டு வைக்கோல், சிவகங்கை பகுதியில் இருந்து தங்கராஜ் என்பவரது லாரியில் பாரம் ஏற்றி கொண்டு வரப்பட்டது.
அப்போது, லாரி பி.எஸ்.ஏ., நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே வரும் போது, தாழ்ந்து தொங்கிய மின்கம்பியில், வைக்கோல் பாரம் உரசியது. அதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
அப்பகுதி மக்கள் சப்தம் போட்டதை கண்ட லாரி ஓட்டுநர், உடனடியாக அருகே இருந்த சிறு நீரோடையில் வைக்கோலை துாக்கி போட்டதால் தீ கட்டுப்படுத்தப்பட்டு, லாரி தப்பியது. இது குறித்து, ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.