/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருவுக்கு தெரு அடிப்படை பிரச்னை; ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., வேதனை
/
தெருவுக்கு தெரு அடிப்படை பிரச்னை; ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., வேதனை
தெருவுக்கு தெரு அடிப்படை பிரச்னை; ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., வேதனை
தெருவுக்கு தெரு அடிப்படை பிரச்னை; ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., வேதனை
ADDED : ஏப் 07, 2025 05:38 AM

கோவை; கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தமிழக வெற்றிக் கழக கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சிங்காநல்லுார் கரும்புக்கடை மைதானத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் யுவராஜ் தலைமை வகித்து பேசுகையில்,''மாநகராட்சியில் ஊழல் தலைவிரித்து, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. சொத்து வரியை, 100 சதவீதம் உயர்த்திவிட்டனர்.
''ஆனால், தெருவுக்கு தெரு அடிப்படை பிரச்னை நிலவுகிறது. மோசமான ரோடுகளில் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்னைகள் நிலவுகின்றன. கோவை மாநகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், அவர்கள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன், வக்கீல் கிரிபிரசாத் உட்பட, 100க்கும் மேற்பட்டோர், 'குறை மனு மட்டும் வாங்குறீங்க குறைகளை தீர்ப்பதில்லை', 'வரி வாங்குறீங்க சாலையை சரி செய்வதில்லை' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.