/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரசாரம்
/
பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரசாரம்
ADDED : மார் 18, 2025 04:22 AM
அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில் பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
அனனுார் கூத்தாண்டவர் கோவில் வீதி, குன்னத்துாராம்பாளையம், சொக்கம்பாளையத்தில் நகர தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
இதில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறை மற்றும் வேளாண் துறைக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, என்றார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், நகர பொருளாளர் ஹரிசங்கர், வார்டு செயலாளர் தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.